Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மத்திய வங்கி ஊழியர்களின் அபரிமிதமான சம்பள உயர்வு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்தநிலையில் பாராளுமன்ற அனுமதியின்றி சம்பள அதிகரிப்புக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய வங்கியிடம் இருந்து உயர்மட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையை கோரியுள்ளது.கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, சம்பள உயர்வு தொடர்பான விடயம் எழுப்பப்பட்டதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.இதன்படி சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய வங்கி அடுத்த வாரம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின்னர், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் மத்திய வங்கியும் அதன் நாணயச் சபையும் அழைக்கப்படும் எனவும் வலேபொட தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய வங்கி ஊழியர்களின் 70 சதவீத சம்பள அதிகரிப்பு குறித்து, தமது குழு கடும் விமர்சனங்களை கொண்டுள்ளது.அத்துடன் இது ஒழுக்கக்கேடான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.