மத்திய வங்கி வளாகத்திற்குள் போராட்டம் : 8 பேர் கைது

0
132

மத்திய வங்கி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

குத்தகை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சிவில் அமைப்பு ஒன்று இன்று காலை முதல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

இதனையடுத்து, அவர்கள் சட்டவிரோதமாக மத்திய வங்கி வளாகத்திற்குள் பிரவேசித்தமையினை அடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.