மத்ரசா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு- மௌலவி விளக்கமறியலில்!

0
108

அம்பாறை சாய்ந்தமருது மத்ரசா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேக நபரை
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.