வாத்துவை வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.கொலை செய்யப்பட்டவர் வாத்துவ வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார்.
உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் மற்றும் 3 வயது போன்று 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.