மனைவி இறந்து 10 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது

0
87
கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் 10 மாதங்களுக்கு பின் அப்பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் களுத்துறை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பதுரலிய, மரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இரவு, சந்தேக நபர் தனது மனைவி முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக ககூறி பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.காயமடைந்த பெண்ணின் நிலைமை மோசமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் 2023 மே 7 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளின் நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தலையில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.