மனைவி மற்றும் கள்ள கணவனை பெற்றோல் ஊற்றி தீ வைத்த நபர்:ஒருவர் உயிரிழப்பு!

0
334

கள்ள கணவருடன் மனைவி உறங்கிக் கொண்டிருந்தபோது நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் ஒன்று பாணமுரே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.