26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னாரில், தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

மன்னாரில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. முன்மொழியப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதற்காகவும், மக்கள் மயப்படுத்தப்படுவதற்காகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல், இன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை, தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பதில் உதவி தேர்தல் ஆணையாளர் கந்தையா நிமலரூபன் தலைமையில் இடம்பெற்ற கருத்தமர்வில், தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க, ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவன நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன் போது, மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கலந்துரையாடலில் பங்கேற்ற உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள், தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles