மன்னாருக்கு படையெடுக்கும் பறவைகள்!

0
10

மன்னார் மாவட்டத்திற்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்துள்ளன. 

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர் பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருவது வழக்கமாகும். 

மன்னார் மாவட்டமானது புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளைச் சேர்ந்த பறவை இனங்கள் பல பகுதிகளுக்கு வருகை தருவதோடு சில பறவை இனங்கள் இனப்பெருக்க செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் நாடுகளுக்குச் செல்கின்றன. 

ஆனால் இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னைய ஆண்டுகளை விட இம்முறை பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. 

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பறவைகளின் வருகை குறைவடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.