சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின், 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று, மன்னார் பிரதான பாலத்தடியில் இடம்பெற்றது.
மன்னார் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில், இன்று காலை 9.25 மணிக்கு, கடற்கரை பகுதியில், தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ, சமூக செயற்பாட்டாளர் பெனடிற், மன்னார் நகர சபை முன்னாள் உப தலைவர் ஜான்சன், மன்னார் நகர சபை முன்னாள் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர், நினைவுச் சுடரை ஏற்றி அஞ்சலியை ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து, மீனவர்கள், வர்த்தகர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன ஊழியர்கள் இணைந்து, சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.