மன்னார் பெரிய பாலத்தடியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் காணப்படும் மோட்டார் சைக்கிளை போக்குவரத்து பொலிஸார் பார்வையிட்டு சென்றனர்.