வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை தொடர்ந்து, வெளிநாட்டு பறவைகள், மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளன.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நூற்றுக்கணக்கான பெரும் பூநாரைகள் வருகை தந்துள்ளன.
இந்த பறவைகள், ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் தீவுகளில் வாழ்கின்றன.
6 இனங்களை கொண்ட இந்தப் பறவைகள், இறால், ஆல்கா, ஓட்டு மீன்களை உண்ணுகின்றன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு, 37 மைல்கள் வரை பறக்கின்ற பூநாரைகள், 300 மைல்களுக்கு மேல் பயணம் செய்து, புதிய இடங்களுக்கு செல்லக்கூடியவை.
இவ்வாறு பூநாரைகள், நீண்ட தூரம் பயணம் செய்து, மன்னாருக்கு வந்துள்ள நிலையில், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அதன் அழகை பார்வையிட்டு வருகின்றனர்.