28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னார் வளைகுடாவில் அரிய வகை
சூரிய மீன் சிக்கியுள்ளது

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கியதுடன் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சூரியி மீனை ஆய்வு செய்தனர்.

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின, அணில் மீன், புள்ளி திருக்கை, சூரிய மீன் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன.

அரிய வகை மீனான சூரிய மீன் பெரும்பாலும் மீன்வர்கள் வலையில் சிக்குவது இல்லை என தெரிவிக்கும் மீனவர்கள் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

பாம்பன் துறைமுகத்திற்கு வந்த இந்த அரிய வகை சூரிய மீனை மண்;டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து மீனின் நீளம் அகலம், எடை உள்ளிட்டவைகளை குறித்து கொண்டனர்.

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன் 55 கிலோ எடை கொண்டதுடன் நான்கு ஆண்டுகளுக்கு பின் பாம்பன் மீன்வர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது அதிகபட்சமாக 4 அரை அடி நீளமும், 2 ஆயிரத்து 300 கிலோ எடை வரை வளரும் தன்மை உடையது. இந்த வகை மீன்கள் இறால், நண்டு, சிப்பிகள், ஆமைகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை உட்கொள்ளும். இதன் வால் துடுப்பு பகுதி மட்டும் உருமாறி காணப்படும். 200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடிய இந்த வகை மீன்கள் ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை. இந்த மீன்கள் ஒரு நேரத்தில் 30 கோடி முட்டைகள் இடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles