மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் பட்டதாரி குடும்பப் பெண் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
26 வயதுடைய எஸ்.சுதன் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் அவருடைய கணவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.