ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு நீதி அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மன்னிப்புக் கடிதம் அவரது சட்டத்தரணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினர் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதித்துறை தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி, நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்ததன் பின்னர், பொது மன்னிப்புக்கான பரிந்துரையை முன்வைப்பது சிறந்தது என நீதி அமைச்சர் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.