மரக்கட்டைகள் விழுந்ததில் 48 வயது நபர் உயிரிழப்பு

0
4

வஸ்கடுவ – கபுஹேன பகுதியில் லொறியில் வேலை செய்து கொண்டிருந்த போது மரக்கட்டைகள் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் கிரிஷாந்த குமார என்ற 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் எகொட உயன பகுதியில் லொறியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த போது மரக்கட்டைகள் விழுந்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.