மருதானை ரயில் நிலைய கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து படுகாயம்

0
104

மருதானை ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் 05 மற்றும் 06 ஆவது நடைமேடையின் கூரை மீது ஏறிய நபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மருதானை ரயில் நிலையத்தின் கூரை மீது ஏறிய நபரை மருதானை பொலிஸாரும் மருதானை ரயில் நிலைய ஊழியர்களும் அவரை கூரையில் இருந்து இறக்குவதற்கு பல தடவைகள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை

இந்நிலையில் காலை 11.20 மணியளவில் அவர் மேற்கூரையில் நடந்து சென்றபோது கூரை உடைந்து நடைமேடையில் விழுந்தார்.

இதன்போது தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.