மருத்துவரின் பையில் தோட்டாக்கள் துள்ளின!

0
15

விமான நிலைய மருத்துவப் பிரிவில் உள்ள ஒரு மருத்துவரின் பையில் எட்டு 9மிமீ  தோட்டாக்கள் கொண்ட ஒரு உறை, கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய பொலிஸ் தெரிவித்துள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் விமான நிலைய நுழைவாயில்களில் உள்ள ஸ்கேனர் மூலம் இவை கண்டறியப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது.

இருப்பினும், பொலிஸ் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்களுக்கான உரிமத்தை பாதுகாப்பு அமைச்சகம் மருத்துவருக்கு வழங்கியது தெரியவந்தது.

விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.