மருத்துவ பீடத்திற்குத் தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
70

அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுகளின் போது, மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட, அம்பாறை காரைதீவைச் சேர்ந்த மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சிவகரன் அக்சயன் எனும் மாணவனே உயிரிழந்தவராவர்.உகந்தை மலையில் தரிசனத்தில் ஈடுபட்ட பின்னர், லாகுகல நீலகிரி ஆற்றில் நீராடிய போதே அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மருத்துவ பீடத்திற்குத் தெரிவான அக்சயனின் மரணச் செய்தியால், காரைதீவுப் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது.