மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்த வர்த்தமானி வெளியீடு!

0
77
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.எனவே, குறிப்பிட்ட மருந்தின் அளவு வடிவம் மற்றும் வலிமை தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதே இந்த விலை நிர்ணய முறையின் நோக்கமாகும் என்று வர்த்தமானி அறிவிப்பு கூறுகிறது.
இரு வழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் விலை, தகவல்கள் மற்றும் ஆதாரங்களையே பயன்படுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.