மறைந்த சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள்

0
100
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலினை பெப்ரவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோரைக் கொண்ட இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் இன்று இந்தத் தீர்ப்பை அறிவித்தது.மறைந்த சனத் நிஷாந்தவின் மறைவைக் கருத்திற்க் கொண்டு, மனுக்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் 2024 பெப்ரவரி 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படும் என நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக சட்டத்தரணி பிரியலால் சிறிசேன மற்றும் சட்டத்தரணி விஜித குமார ஆகியோரினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.2022 மே மாதம் இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவித்ததற்கு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் பொறுப்பு என கூறியதற்காக மறைந்த சனத் நிஷாந்த மீது 2022 ஒகஸ்டில் பல தரப்பினரால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.