மறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!

0
108

மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்திற்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருதை பெற்று கொண்டார்.
விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி 2வது கட்டமாக நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் கையில் இருந்து விருதை பெற்றவுடன் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்.
விஜயகாந்த் மறைந்த நிலையில் மத்திய அரசு தந்த பத்ம பூஷன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்ததாக தெரிவித்துள்ளார்.