மலேசியாவில் 3 இலங்கையர்கள் கொலை!

0
207

மலேசியா செந்தூலின் கீழ்கோவில் கிராமத்தில்; மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை தேடிவருவதாக, மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் மூவரும் இலங்கையர்களென கோலாலம்பூர் பொலிஸ் தெரிவித்துள்ளது.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீட்டை சோதனை செய்த பொலிஸார், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்கள் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

மலேசிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.