மலேஷியாவில் இலங்கையர் பலி!

0
35

மலேசியாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் சேமிப்பு நிலையத்தில்  மின்சாரம் தாக்கி இலங்கையர் ஒருவரும் ஒரு நாயும் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறந்தவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை, மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநீரில் மின்சார கம்பிகள் சிக்கியிருந்ததாகவும் அதனை அறியாத இளைஞன் தனது கைத்தொலைபேசியை சார்ஜரில் இட முயற்சித்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.