மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ்
கலவன் பாடசாலையில் சிறுவர் தினம்

0
138

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு எஸ். சிவயோகராஜா மற்றும் பிரதி அதிபர் ஏ.எல்.சர்ஜீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் புலம்பெயர்ந்த வாழும் ஜேர்மனியில் உள்ள சமூக சேவையாளரும் வர்த்தகருமான மாட்டின் ஜெயராஜ், கல்விக்கான கண்கள் அமைப்பின் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான கனகலிங்கம் மகாலிங்கம் , இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது 98 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.