மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் காட்மோர் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் இருந்த இன்று (24) காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மவுஸ்ஸாகெல காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்பகுதியில் நன்னீர் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறித்த சடலத்தை கண்டு காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.