மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்!!

0
39

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன்  விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதன்பின்னர்,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுடன் இணைந்து நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில்,

“அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான  தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ  முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.