29 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மஹிந்தவின் ஊடகப் பிரிவு அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனையில் உள்ள உத்தியோக பூர்வ வாகனங்கள் தொடர்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காக தற்போது ஆறு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள், சரியான தகவல் அல்ல எனவும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் நாளை மஹிந்தவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 6 உத்தியோகபூர்வ வாகனங்களில் 3 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles