முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள் தங்கியுள்ள வீட்டிற்கான நீர் கட்டணம் ஜனாதிபதி செயலகம் மூலமாக செலுத்தப்படுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட நீர் கட்டணங்கள் சில மாதங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டவை என்று கூறிய முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அந்த நேரத்தில் அவ்வீட்டில் 160 பாதுகாப்புக் காவலர்கள் இருந்ததால் இவ்வளவு நீர் கட்டணத்தைப் பெறுவது நியாயமானது எனத் தெரிவித்தார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.