மஹியங்கனை – கண்டி பிரதான வீதிக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகக் குழு விஜயம்

0
174

மஹியங்கணை – கண்டி பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த நிலையில் குறித்த பகுதிக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் விசேட குழுவொன்று இன்று விஜயம் செய்துள்ளது.

நேற்று முன்தினம் மூடப்பட்ட குறித்த வீதியுடனான போக்குவரத்து, நேற்றைய தினம் ஒருவழிப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட நிலையில் அந்த வீதியை முழுமையாகத் திறப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் வழங்கப்படுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மூடப்பட்டுள்ள ஒரு வழிப் போக்குவரத்து அடுத்த சில தினங்களில் திறக்கப்படும் என மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.