மாகாண சபை முறைமையை அமுலாக்குவதை தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை – சி.வி.கே சிவஞானம்!

0
3

மாகாண சபை முறைமையை அமுலாக்குவதை தற்போதை தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை என்பது தெளிவாகப் புலனாகியுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மாகாண நிர்வாகத்தையும் மத்திய நிர்வாகத்தையும் இணைக்கும் தளமாக மாவட்ட இணைப்புக்குழு இருந்து வந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் மாவட்ட இணைப்புக் குழுக்களில் ஆளுனர்களின் பங்களிப்பை இல்லாது செய்திருக்கிறது. 

இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தளவுக்கு தங்களுக்கு ஆதரவாக உள்ளது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.