சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இன்று (01) முதல் இருமடங்கு அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இக்கட்டண அதிகரிப்பை அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பனெசி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவர் விசா கட்டணம் இலங்கை மதிப்பில் ஒரு இலட்சத்து 46 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.
(ஜுலை 01) முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடதக்கது.