மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியருக்கு விளக்கமறியல்

0
56

14 வயது பாடசாலை மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பிரபலமான ஆசிரியர் ஒருவரே அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த ஆசிரியர், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.