மாதம்பை விபத்து – சாரதிகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாகத் தகவல்!

0
6

மாதம்பை – இரட்டைகுளம் பகுதியில் நேற்றிரவு மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரும் விபத்தின்போது போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பை, இரட்டைகுளம் பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டியொன்றும், பேருந்தொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்தது.குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயொருவரும் அவரது குழந்தையும் மற்றுமொரு பெண்ணுமாக மூவர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், குறித்த பேருந்தின் சாரதியும் முச்சக்கர வண்டியின் சாரதியும் விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.