நாட்டில் குடும்பம் ஒன்றுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாகவும் தற்பொழுதே மாதாந்தச் செலவு குறைவடைந்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் கற்கைப் பிரிவு பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவில் 6 ஆயிரத்து 37 ரூபா குறைவடைந்துள்ளது.
உணவு வகைகளுக்கான மாதாந்த செலவும் 2 ஆயிரத்து 885 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் குறைவடைந்ததன் காரணமாக, மக்களுக்கு 3 ஆயிரத்து 145 ரூபா மீதமாகியுள்ளது. என பேராசிரியர் வசந்த அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.