மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்