மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் நடை பவனியும் வலைப்பந்தாட்ட போட்டியும்

0
151
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் 2027ஆம் ஆண்டில் கொண்டாடவிருக்கும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாக்கியம் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள நடை பவனியும் வலைப்பந்தாட்ட போட்டியும் இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது..
இப்பாடசாலை 1927ஆம் ஆண்டில் மாத்தளை    கந்தசாமி ஐயா  பாக்கியம் அம்மாள் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட  இடத்தில்,  இ லங்கை விஜயம் மேற்கொண்டிருந்த மகாத்மா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்ட்டதாகும்.இன்று 96ஆவது அகவையில் காலடி பதிந்திருக்கும் இப்பாடசாலை தங்களது நூற்றாண்டு விழாவை முன்னோக்கி அடி எடுத்து வைக்கும் முகமாக பழைய மாணவர்கள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனிக்கும் அதனை தொடர்ந்த வலைப்பந்தாட்ட போட்டிக்கும் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றார்கள்.