மாமனை அடித்துக் கொன்ற மருமகன்!

0
277

தனிப்பட்ட தகராறு காரணமாக மாமனாரை மாலிம்படை மத்திய பிரதேசத்தில் இருந்து லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று மருமகன் அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை, கிரல கெலே பகுதியில் இச்சம் பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 43 வயதான மாலிம்பட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவிய குற்றத்திற்காக மாத்தறையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மருமகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாலிம்படை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.