28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில்
பொலிஸ் நடமாடும் சேவை

மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் பொலிஸ் நடமாடும் சேவை இன்று காலை 09..0 மணி முதல் மாலை மூன்று மணி வரை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு தலைமையக நிலைய பொறுப்பதிகாரி பி கே .ஹெட்டிஹார்ச்சி தலைமையில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ் .சிவநாதன் வழிகாட்டலின் நடைபெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் பெரிய ஊரணி ,இருதயபுரம் கிழக்கு ,இருதயபுரம் மத்தி ,கருவப்பங்கேணி, அமிர்தகழி ,குமாரபுரம் ,சின்ன உப்போடை , பெரியஉப்போடை ,வெட்டுக்காடு , புன்னைச்சோலை மாமாங்கம் ,ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெற்றன

இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் எல் எ யு . சரத்குமார மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ .பி. டி . சுதபால , உதவி பிரதேச செயலாளர் எம் ஆர் . சியாவுல் ஹக் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தனர். இதில் முறைப்பாட்டு பிரதிகள் , பொலிஸ் நற்சான்றிதழ் ,முறைப்பாடுகளை விசாரணை ,தேசிய அடையாள அட்டை ,பிறப்பு இறப்பு சான்றிதழ் ,இலவச கண் பரிசோதனை ,சாரதி அனுமதி பத்திரம் ,கொவிட் 19 3ஆம் , 4ஆம் கட்ட தடுப்பூசிகள் ,காணி சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.

இலங்கை போலீஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை விசேட பொலிஸ் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட விழிப்புணர்வு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles