மாரடைப்பால் காலமான மனோஜின் உடலுக்கு பலரும் அஞ்சலி!

0
22

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். மனோஜ் மறைவு திரையுலகிலும், இரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்த மனோஜுக்குச் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.உயிரிழந்த மனோஜின் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.


நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை மனோஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன்பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.