மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் கிராமஉத்தியோகஸ்தர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு இன்று மார்புவலியென சென்றவர் அன்டிஜன் பரிசோதனைக் குட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அனைத்தொடர்ந்து வெல்லாவெளி பிரதேச பொதுச்சுகாதார வைத்தியருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்துக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொன்ட போது தாய் மற்றும் பிள்ளைக்கு தொற்று இருப்பதாக ,னங்கானப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுரவணையடியூற்று விவேகானந்த புரம் பகுதியில் அக்குடும்பத்துடன் சேர்ந்ததாக இருந்த 06 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன