லசித் மாலிங்க தனது ஃபேஸ்புக் கணக்கில் தனது பந்துவீச்சு பாணிக்கு நிகரான பந்து வீச்சு பாணியை கொண்ட இளம் வீரர் குறித்து பதிவிட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
அதன்படி, மாலிங்க ரசித்த நூகவெல மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நிமேஷ ஜலன என்ற மாணவரை அத தெரண தேடி சென்றது.
பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட காணொளியால் லசித் மலிங்கவின் பந்துவீச்சுக்கு நிகரான நிமேஷாவின் பந்துவீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
“புதிய பந்தில் அவுட்ஸ்விங் மற்றும் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் திறன் கொண்ட ஒரு நல்ல பந்துவீச்சு நிலையாகும். அவர் இந்த திறமைகளை மேம்படுத்தி புதிய விஷயங்களை கற்றுக்கொண்டால், அடுத்த 4-5 ஆண்டுகளில் அவர் நீண்ட தூரம் செல்ல முடியும்.” என லசித் மலிங்கா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.