மாலைத்தீவின் அதிபரானார் முகமது மூயிஸ்

0
153

மாலத்தீவின் 8-ஆவது அதிபராக முகமது மூயிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டாா்.

அந்நாட்டின் தலைமை நீதிபதி முதாசிம் அத்னான், முகமது மூயிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீஃப் பதவியேற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் ஹசன் மகமுத், பாகிஸ்தான் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் முா்தாஜ் சோலங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.