மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளது:
எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அங்கு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். விரைவில் வலிமையாக மீண்டு வருவேன்.