ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட் கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிட்செல் ஸ்டார்கை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது.அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடாவை ரூ. 10.75 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம் முறையில் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் தக்க வைத்தது.அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.