மினுவாங்கொடை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 33 மற்றும் 43 வயதான இருவரும், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரில் வந்த இருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இருவரையும் இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.