மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது!

0
12

மினுவாங்கொடை பகுதியில், ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக பிரவேசித்த உந்துருளியின் உரிமையாளரான பெண் மற்றும் அந்த உந்துருளியை துப்பாக்கிதாரிக்கு வழங்கிய நபர் ஆகியோர் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கெஹெல்பத்தர பத்மேவுடன் நிதி பரிமாற்றலில் ஈடுபட்ட லஹிரு ரன்தீர காஞ்சன என்பவர் மினுவாங்கொடை பத்தன்டுவன சந்தியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். உந்துருளியில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான லஹிரு ரன்தீர் காஞ்சன என்பவர் நீண்ட காலமாக கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பை பேணியவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.