மினுவாங்கொடை மற்றும் கிராண்ட்பாஸ் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

0
16

மினுவங்கொட பகுதியில் கடந்த 7 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் கல்லொலுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, நேற்று (13) மினுவாங்கொடைஇ யகொடமுல்ல மற்றும் தகோன்ன பகுதிகளில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், இந்தக் குற்றச் செயலுக்கு உதவிய மூன்று சந்தேக நபர்களை 17 கிராம், 350 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 05 தொலைபேசிகளுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 33 வயதுடையவர்கள் என்றும் யகொடமுல்ல இ தகோன்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது .சந்தேக நபர்களில் ஒருவருக்கு ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (13) முகத்துவாரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 13 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை ஹெதல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்தவர் எனத் தெரியவந்துள்ளது.மேலும் அவர் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய நண்பர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.