மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது – பாராளுமன்ற உறுப்பனர் ஜீ.எல்.பீரிஸ்

0
106

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு முதலீடுகள் அவசியம் என்று தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகின்றது.

கடனை வைத்துக்கொண்டு இருக்க முடியாது எனவே முதலீடுகள் அவசியம் என்று தொடர்ச்சியாகக் கூறிவருகின்றனர்.

முதலீடுகளுக்கு நிரந்தரமான வரிக்கொள்கை என்பது அவசியம்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரிகளில் மாற்றங்களை செய்வதால் நாட்டில் வியாபாராத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் தரப்பினருக்கு நம்பிக்கையீனமே ஏற்படும்.

வியாபாரிகள் சந்தைகளில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். அந்தப் பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோரிடம் பணம் இருக்க வேண்டும்.

பொருட்களை வாங்குமளவு நுகர்வோரிடம் பணம் கையிருப்பில் இருக்கின்றதா?

இன்று எமது நாட்டில் பணவீக்கமானது நூற்றுக்கு 60 சதவீதமாகக் காணப்படுகின்றது.

உணவு பணவீக்கம் நூற்றுக்கு 95 சதவீதமாக காணப்படுகின்றது.

தற்போது தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

வாழ்க்கை செலவீனம் வானளவு உயர்ந்துகொண்டு செல்கின்றது. வருமானத்துக்கான மார்க்கங்கள் இல்லாமல் போகின்றன.

இதுவே இன்று எமது நாட்டில் காணப்படும் யதார்த்தமாகும்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.

அடுத்த மாதத்திலிருந்து மின்சார கட்டணம் என்பது 70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

அவ்வாறாயின் நாட்டில் தொழிற்சாலை துறைகளை; எவ்வாறு வெற்றிகரமாக முன்கொண்டு செல்வது.

இவற்றுக்கான தீர்வை தேடுவது மிகவும் அவசியமானதாகும்.