பூகம்பத்தினால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மண்டலாயில் மின்சாரம் இல்லை குடிநீர் இல்லை என தெரிவித்துள்ள பிபிசி செய்தியாளர் அந்த நகரம் இடிபாடுகள் நிறைந்ததாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
பிபிசிசெய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நான் தற்போது மண்டலாயில் இருக்கின்றேன்,பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதிக்கு அருகில்.
நாங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததற்கு மாறாக ஒரு நாள் தாமதமாக நேற்றிரவு மண்டலாய் வந்து சேர்ந்தோம்.
பின்னர் நாங்கள் அந்த நகரை சுற்றிகாரில் பயணித்தோம், நகரம் முழுவதும் இருள்மயமானதாக காணப்பட்டது,- மின்சாரம் இல்லை,குடிநீர் இல்லை,கழிவறை இல்லை.
ஹோட்டலில் தங்குவதற்காக எங்களை முன்கூட்டியே பதிவு செய்யமுடியவில்லை இதனால் மாற்று திட்டமாக காரிலேயே உறங்கினோம்.
எனினும் சிறிது தூரம் காரில் பயணித்த பின்னர் அதிஸ்டவசமாக நாங்கள் ஹோட்டல் ஒன்றை கண்டுபிடித்தோம்.ஆனால் அங்கு உணவிருக்கவில்லை
நாங்கள் உணவை தேடி புறப்பட்டோம், சில கடைகள் திறந்திருந்தன ஆனால் அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
நேற்றிரவு முழுவதும் இணைய இணைப்பிருக்கவில்லை, ரங்கூனில் உள்ள எங்கள் குழுவினருடன் தொடர்பில் இருப்பது கடினமாகயிருந்தது,தொலைபேசிகள் எப்போதாவது இயங்கின.
நள்ளிரவின் பின்னர் பாரிய அதிர்வு எதிர்கொண்டோம்,ஹோட்டலில் உறங்குவது பாதுகாப்பானது என நாங்கள் கருதவில்லை.நாங்கள் அங்கிருந்து வெளியேறி மடாலயம் ஒன்றிற்கு சென்றோம்.அதிகாலை மீண்டும் ஹோட்டலிற்கு வந்து எங்கள் பொருட்களை எடுத்தோம்.
பகலில் நாங்கள் மண்டலாயினை பார்ப்பது இதுவே முதல் தடவை- நகரம் முழுவதும் இடிபாடுகளால் நிரம்பியுள்ளது.