மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி

0
31

ஹாலிஎல-தீகல்ல பிரதேசத்தில் நேற்று (29) மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹாலிஎல-திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினமான நேற்று (29) விலங்குகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக , அருகில் உள்ள வீடொன்றில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சார கம்பியில் சிக்கியே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.